உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்: நீலகிரி ஆட்சியர் தகவல்


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மலர் கண்காட்சியை பார்வையிட சிறியவர்களுக்கு ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது என்று நீலகிரி ஆட்சியர் கூறியுள்ளார். ரோஜா கண்காட்சியில் சிறியவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக கட்டணம் நிர்ணயம் செய்துள்ளனர். இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளாக காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி என விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மலர் கண்காட்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து பல லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர்.

இம்மலர் கண்காட்சி மற்றும் இதர காட்சிகள் ஆண்டு தோறும் மலர்க் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி குழுவினரால் காட்சிகள் நடத்து வதற்கான தேதிகள், ஏற்பாடுகள் மற்றும் வரவு, செலவு குறித்தான தீர்மானங்கள் அனைத்தும் மலர் மற்றும் பழ கண்காட்சி குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இந்தாண்டு இம்மாவட்டத்துக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை மூன்று நாட்கள் 64வது பழக்கண்காட்சி நடைபெறும் என்றும். கோடை சீசனின் முதலில் கோத்தகிரி காய்கறி கண்காட்சி, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.

 

The post உதகை மலர் கண்காட்சியை பார்வையிட கட்டணம் நிர்ணயம்: நீலகிரி ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: