குமரியில் காணாமல் போன 211 செல்போன்கள் மீட்பு-உரியவர்களிடம் எஸ்.பி ஒப்படைத்தார்

தக்கலை : காணாமல் போன செல்போன்கள் காவல்துறை சைபர் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டது. இதனை உரியவர்களிடம் மாவட்ட எஸ்.பி  ஹரிகிரன் பிரசாத் ேநரில் ஒப்படைத்தார்.

குமரி மாவட்டத்தில்  உள்ள  அனைத்து காவல் நிலையங்களிலும் ெசல்போன்கள் காணாமல் போனதாக பல்வேறு மனுக்கள் பதிவானது. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ் பி.,  ஹரிகிரன் பிரசாத் உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட சைபர் கிரைம், தனிப்படையினர் காணாமல் போன செல்போன்களை மீட்டனர்.

ரூ.25லட்சம் மதிப்பிலான 211 ெசல்போன்கள் மீட்கப்பட்டது. இந்த செல்போன்களை உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி தக்கலை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதற்காக செல்போன்களை இழந்த புகார் தாரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களிடம் களியக்காவிளை இன்ஸ் ெபக்டர் எழிலரசி காவல் செயலி குறித்தும், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் சைபர்கிரைம், குற்றத்தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்தும் பேசினார்.

 மாவட்ட எஸ் பி.,  ஹரிகிரன் பிரசாத்  தக்கலை, கொற்றிக்கோடு, இரணியல் ஆகிய காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக  புகார் அளித்ததில் செல்போன் கண்டெடுக்கப்பட்ட 40 பேருக்கு செல்போன்களை வழங்கினார்.  பின்னர் அவர் கூறுகையில், செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் ரூ. 33 லட்சம் மதிப்பிலான 322 செல்போன்கள்  கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் இந்த ெசல் போன்களை  கண்டுபிடிக்க காரணமான சைபர்கிரைம் போலீசாரை பாராட்டினார். மேலும் செல்போன் இழந்து மீட்டவர்களிடம்  காவல் செயலியை பொருத்துமாறும், செல்போன் எவ்வாறு தவற விட்டீர்கள் என்றும் கேட்டறிந்தார். இதில் தக்கலை டி.எஸ்.பி கணேசன், சப் இன்ஸ் பெக்டர்கள் ராஜசேகரன், கணேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: