திருப்பதியில் கனமழை பக்தர்கள் கடும் அவதி

திருமலை: திருமலையில் நேற்று காலை முதல் பெய்த கனமழையால் மலைப்பாதையில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கோதாவரி, கிருஷ்ணா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள திருமலையில் நேற்று காலை முதல் இரவு வரை மழை பெய்தது. இதனால் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதிப்பட்டனர். தரிசனம் முடித்த பக்தர்கள் மழையில் நனைந்தபடி ஓய்வறைகளுக்கு  சென்றனர். ஓய்வறை கிடைக்காத பக்தர்கள், நிழற்பந்தல், கட்டிடங்கள், பேடி ஆஞ்சநேயர், வராக சுவாமி சன்னதி அருகே காத்திருந்தனர். மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மரங்கள் உடைந்து சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதித்தது. தேவஸ்தான வனத் துறை ஊழியர்கள்  மரக்கிளைகளை அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.

Related Stories: