தமிழகம் முழுவதும் 15 ஆர்டிஓக்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 15 ஆர்டிஓக்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் வெளியிட்டுள்ள உத்தரவு: தர்மபுரி ஆர்டிஓவாக பணியாற்றிவந்த ராஜ்குமார், உளுந்தூர் பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஆர்டிஓவாக பணியாற்றி வந்த கனகவள்ளி, தென்காசிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி ஆர்டிஓ மாணிக்கம், வேலூருக்கும், பொள்ளாச்சி ஆர்டிஓ குமரன், கோவை இணை ஆணையர்(அமலாக்கம்) அலுவலகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவினாசி ஆர்டிஓவாக உள்ள சித்ரா, திருப்பூர் வடக்கு ஆர்டிஓவாகவும், வேலூர் ஆர்டிஓ சக்திவேல், நாகர்கோவிலுக்கும், பெருந்துறை ஆர்டிஓ பாஸ்கர் அவினாசிக்கும், தூத்துக்குடி ஆர்டிஓ குமார், கூடலூருக்கும், நத்தம் ஆர்டிஓ மோகனப்பிரியா, திருநெல்வேலி துணை ஆணையர் அலுவலகத்துக்கும், கோவை வடக்கு ஆர்டிஓ தனசேகர், கோவை தெற்கு ஆர்டிஓவாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உசிலம்பட்டி ஆர்டிஓ செல்வி, பொள்ளாச்சிக்கும், திருநெல்வேலி துணை ஆணையர் அலுவலக ஆர்டிஓ பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூருக்கும், நாமக்கல் வடக்கு ஆர்டிஓ ராஜசேகர், அம்பாசமுத்திரத்துக்கும், திருப்பூர் வடக்கு ஆர்டிஓ எம்.வேலுமணி, கோவை வடக்கு ஆர்டிஓவாகவும், அரவக்குறிச்சி ஆர்டிஓ பி.வேலுமணி, கோவை வடக்கு ஆர்டிஓவாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: