சாலை பாதுகாப்பு ரோந்து மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ‘சூப்பர் கிட் காப்’திட்டம்

சென்னை: சாலை பாதுகாப்பு ரோந்து மற்றும் பள்ளி மாணவர்களுக்கான சூப்பர் கிட் காப் புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, 12 நாளில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு அடையாள அட்டை விநியோகிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ‘இளைஞரை பிடிக்கவும்’என்ற கருத்தின் கீழ் சாலையை பயன்படுத்துபவர்களுக்கு ‘சாலை பாதுகாப்பு’என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 7ம் வகுப்புக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

சாலை பாதுகாப்பு ரோந்து வீரர்களுக்கு, சாலை பாதுகாப்பு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து பல்வேறு நுணுக்கங்கள் குறித்து போக்குவரத்து போலீசாரால் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை நகரில் 250 பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், பள்ளி மாணவர்கள் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் ‘சூப்பர் கிட் காப்’என்ற புதிய திட்டத்தை கீழ்ப்பாக்கம் புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். அப்போது, சாலை பாதுகாப்பு ரோந்து பிரிவில் சிறப்பாக செயலாற்றிய 12 பள்ளி தலைமை ஆசிரியர்கள், 10 போக்குவரத்து பணியாளர்கள், 9 போக்குவரத்து பாதுகாவலர்கள், 20 ஆர்எஸ்பி மாணவர்களுக்கு சிறப்பு விருதுகளை அவர் வழங்கி கவுரவித்தார்.

இந்த சூப்பர் கிட் காப் திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு அடையாள  அட்டை வழங்கப்படும். சாலை பாதுகாப்பு விதிகள் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளித்தல், வீட்டின் சூப்பர் கிட் காப் என்ற குறிச்சொல்லை வழங்குதல், பெற்றோர்கள், ஆட்டோ, வேன் டிரைவர்கள் வாகனத்தை ஓட்டும் முறைகளை அவர்கள் கண்காணிப்பார்கள். 12 நாட்களில் ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு ‘சூப்பர் கிட் காப்’ அட்டை விநியோகிப்படும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மாணவர்களை மேம்படுத்துவதே நோக்கம் என தெரிவித்தார் கமிஷனர் சங்கர் ஜிவால்.

மேலும், இந்த அட்டை பெறும் மாணவர்கள் தனது பள்ளி வாகனத்தின் ஓட்டுனர் விதியை பின்பற்றுகிறாரா என்ற கேள்விக்கு ‘ஆம்’இல்லது ‘இல்லை’என குறிக்க வேண்டும். யூத் இந்தியா தன்னார்வ தொண்டர்கள் மூலம் வகுப்பு வாரியாக இந்த அட்டையை மாணவர்களிடம் பெறுவார்கள். அதன்படி மாணவர்கள் குறித்த அட்டையில் உள்ள குறியீடுகள்படி தவறு செய்யும் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க இது உதவியாக இருக்கும்.

Related Stories: