தெற்கு சூடானுக்கான ஐநா படை தளபதியாக வெலிங்டன் கல்லூரி கமாண்டன்ட் நியமனம்

குன்னூர்: தெற்கு சூடானுக்கான ஐநா சபை படை தளபதியாக குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி கமாண்டன்ட் மோகன் சுப்ரமணியனை, ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ கெஜ்ரஸ் நியமித்துள்ளார்.

இதுகுறித்து கமாண்டன்ட் மோகன் சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐ.நா. சபையில் அமைதி காத்தல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. 1948ம் ஆண்டில் இருந்து இதுவரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் அதிகளவிலான பங்களிப்பு அளித்ததில் இந்தியாவும் ஒன்று. பல ஆண்டுகளாக ராணுவ வீரர்கள், போலீசார், விமான படையினர் அதிகமாக உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஐநா சபையின் அமைதி பணிக்காக, நம் எல்லையை தாண்டி, நமது படையினர் அமைதிக்காக 160 பேர் மரணமடைந்துள்ளனர். அமைதிக்காக இவ்வளவு வீரர்கள் உயிர்நீத்தது வேறு எந்த நாடுகளிலும் இல்லை.

இதுபோன்ற இடத்தில் தலைமை ஏற்க இந்தியா மற்றும் ஐநா தேர்வு செய்து பொறுப்பு ஏற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. உலக அமைதிக்காக இந்தியா செய்கின்ற ஒரு முக்கியமான இந்த பணியில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: