ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு வேலிகளை உடைத்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி: போலீசார் விசாரணை

திருப்பத்தூர்: ஆம்பூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை உடைத்து கொண்டு லாரி ஒன்று 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில்  சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு 143 கோடி மதிப்பிலான மேம்பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ஒரகடம் பகுதியில் இருந்து புதிய லாரி ஒன்றை எடுத்துகொண்டு காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓட்டுனர் கட்டுப்பாட்டு இழந்த லாரி மேம்பால பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் தடுப்புகள் மீது மோதி 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுநர் மோகன்ராஜ் படுகாயங்களுடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளத்தில் இருந்த லாரியை தற்போது மீட்டு வருகின்றனர் இது குறித்து ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகமாக விபத்து ஏற்படுவதால் மேம்பாலம் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: