விநாயகன் யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும்: தேவர்சோலை கிராம மக்கள் கோரிக்கை

கூடலூர்:  விநாயகன் யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் என்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது தேவர்சோலை. இந்த பேரூராட்சிக்கு உட்பட்டது மச்சிக்கொல்லி, பேபி நகர், செம்பக்கொல்லி. மதுமலை வனப்பகுதியொட்டி இந்த கிராமங்கள் அமைந்துள்ளன.

கோவையில் அட்டாகசம் செய்த விநாயகன் காட்டுயானை மயங்க ஊசி செலுத்தி இங்கு விடப்பட்டது.அந்த யானை இங்குள்ள கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீபகாலமாக விவசாய நிலங்கள் மட்டுமின்றி ஊருக்குள்ளும் விநாயகன் யானை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.பொதுமக்கள் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க யானை ஊருக்குள் நுழைவதை தடுக்க அகழி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: