முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு பேச்சு; யுடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு

கோவை: கடந்தாண்டு அக்டோபர் 31ம் தேதி சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் சங்கர் விமர்சனம் செய்து பேசியதாக தெரிகிறது. இந்த விவரங்களை குறிப்பிட்டு கோவை அவினாசி ரோடு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் முத்து (42) என்பவர் கோவை ரேஸ்ேகார்ஸ் போலீசில் புகார் செய்தார். அதில், ‘‘முத்துராமலிங்க தேவர் குறித்து மிகவும் இழிவாக, சாதி உள் நோக்கத்துடனும், அவதூறு பரப்பும் வகையிலும் கிண்டலாக சங்கர் பேசியிருக்கிறார்.

தேவர் மற்றும் தேவேந்திர குல மக்களிடம் சாதி ரீதியான பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலும் கலவரம் தூண்டும் நோக்கத்திலும் பேசியிருக்கிறார். சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதையடுத்து சங்கர், ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் மீது இந்திய தண்டனை சட்டம் 153, 153 (ஏ), 504, 505 என்ற பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் 2 பேரும் விரைவில் கைது செய்யப்பட உள்ளனர்.

The post முத்துராமலிங்க தேவர் குறித்து அவதூறு பேச்சு; யுடியூபர் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: