பாஜ அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு குஜராத்தில் போதை மாபியாக்களுக்கு ஆதரவு

புதுடெல்லி: குஜராத்தில் போதைப்பொருள் மாபியாக்களுக்கு ஆதரவு அளிக்கப்படுவதாக ஆளும் பாஜ அரசு மீது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பதிவில், ‘குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மே மாதம் ரூ.500 கோடி மதிப்புள்ள 56 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜூலையில் 75 கிலோ கைப்பற்றப்பட்டது.

இவற்றின் மதிப்பு ரூ.375 கோடியாகும். குஜராத்தில் இரட்டை என்ஜின் ஆட்சியில் போதைப்பொருள், மதுபான மாபியாக்களுக்கு ஆதரவு தரும் நபர்கள் யார்? ஒரே துறைமுகத்தில் மூன்று முறை போதைப்பொருட்கள் பிடிபட்டபோதிலும், தொடர்ந்து அதே துறைமுகத்துக்கு போதைப்பொருள் எப்படி வருகின்றது. குஜராத்தில் சட்டம், ஒழுங்கு உள்ளதா? இது மாபியாக்களின் அரசாங்கமா?’ என விமர்சித்துள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ‘பாஜ அரசின் கீழ் மாபியா கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருட்களை விநியோகம் செய்கின்றன. சட்டம் ஒழுங்கு ஆதரவற்று உள்ளதா அல்லது மாபியாக்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதா?’ என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: