கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர இரண்டரை மணி நேரம் வீணை வாசித்த 6ம் வகுப்பு மாணவி!: குவியும் பாராட்டு..!!

சேலம்: கொரோனா தொற்றில் இருந்து உலகம் மீண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், 6ம் வகுப்பு மாணவி ஒருவர் இரண்டரை மணி நேரத்தில் 25 கீர்த்தனைகளை வீணையில் இடைவிடாமல் வாசித்து பிரார்த்தனை செய்துள்ளார். சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த கருணாகரன், சிவகாமி தம்பதியினரின் மகள் சைந்தவி. 6ம் வகுப்பு படித்து வரும் இவர் அவருடைய தாயாரிடம் வீணை பயின்று வருகிறார். 
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் நலம்பெற வேண்டி மாணவி சைந்தவி வீணையில்  25 கீர்த்தனைகள் வாசித்து பிரார்த்தனையில் ஈடுபட்டார். மகா கணபதியில் தொடங்கி தனஸ்டி உள்ளிட்ட 25 கீர்த்தனைகளை இடைவிடாமல் 2 மணி நேரம் 30 நிமிடத்தில் மனம் உருகி வாசித்து மாணவி பிரார்த்தனை செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீணை வாசிப்பதில் உலக சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக மாணவி சைந்தவி தெரிவித்துள்ளார். 

The post கொரோனாவில் இருந்து மக்கள் மீண்டுவர இரண்டரை மணி நேரம் வீணை வாசித்த 6ம் வகுப்பு மாணவி!: குவியும் பாராட்டு..!! appeared first on Dinakaran.

Related Stories: