கோவா அரசு அமல்படுத்தும் பொது சிவில் சட்டத்தில் திருமணத்துக்கு கெடுபிடி: நாடாளுமன்ற குழு அதிர்ச்சி

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது சட்டத்தை அமல்படுத்தும் வகையில், பொது சிவில் சட்டம் கொண்டு வர ஒன்றிய அரசு விரும்புகிறது. இதை நடைமுறைப்படுத்துவதில் பாஜ ஆளும் மாநில அரசுகள் தீவிரமாக உள்ளன. இதில், முன்னணியில் உள்ள கோவா அரசு, அம்மாநிலத்திற்கான பொது சிவில் சட்டத்தை தயாரித்துள்ளது. இச்சட்டம் குறித்து, பாஜ எம்பி சுஷில் குமார் மோடி தலைமையிலான சட்டத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த ஜூன் மாதம் கோவா சென்று நேரில் ஆய்வு நடத்தியது. அப்போது, சட்டத்தை எவ்வாறு அமல்படுத்தப்படுத்துவீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாநில அதிகாரிகளிடம் நாடாளுமன்ற குழு கேட்டது. அதோடு, கோவா பொது சிவில் சட்டத்தில் திருமணம், சொத்து பிரிப்பு உள்ளிட்ட விஷயங்களில் காலாவதியான, விசித்திரமான, சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய அம்சங்கள் இருப்பதாக குழுவின் உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவை சமத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டிருக்கவில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், கோவா பொது சிவில் சட்டத்தால் பிரச்னைகள் கிளம்பும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

Related Stories: