இளவரசர் சார்லசுக்கு பின்லேடன் நன்கொடை: ரூ.9.5 கோடி வாங்கியதாக சர்ச்சை

லண்டன்: இங்கிலாந்தில் செயல்படும் இளவரசர் வேல்ஸ் அறக்கட்டளை, 1979ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு சர்வதேச அளவில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி திரட்டப்படுகிறது, இந்நிலையில், அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடனின் குடும்பத்திடம் இருந்தும் இந்த அறக்கட்டளை ரூ.9.5 கோடி நன்கொடை பெற்றதாக இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒசாமாவின் ஒன்று விட்ட சகோதரர்களான பக்ர் பின்லேடன், சபீக் ஆகியோர் 2013ம் ஆண்டு இந்த தொகையை வழங்கியுள்ளனர். அந்த நிதியை வாங்க வேண்டாம் என்று அறக்கட்டளை ஆலோசகர்கள் அறிவுறுத்திய போதும், அதை வாங்க அறக்கட்டளை அறங்காவலர்கள் ஒப்புதல் அளித்ததாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவனம், அதன் அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: