பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 110 ஆண்டு கழித்து நடக்கும் திருவிழாவில் பங்கேற்க முஸ்லிம்களுக்கு அழைப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில் 1912-ம் ஆண்டு முதல் செல்லியம்மன் கோவில் திருவிழாக்களில் இந்து மற்றும் முஸ்லிம் தரப்பு மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,எஸ்.மணி டி.ஆர். ஓ அங்கையர்கன்னி வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர் முன்பாக இருதரப்பு மக்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வி.களத்தூர் கிராமத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி அமைதியான முறையில் திருவிழா நடத்திட இருதரப்பினரும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டதையடுத்து

வி.களத்தூர் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா 16.5.2022 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்கள் இந்து சமய பிரமுகர்களிடம் வழங்கி அவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்கள்.

மேலும் அவர்களுக்கான உரிய மரியாதை வழங்கி எவ்வித அசம்பாவிதமும் இன்றி விழா சிறப்பாக சுமூகமாக இருதரப்பு சமுதாயத்தினரும் இணைந்து நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் வி.களத்தூர் லட்சுமி நாராயண பெருமாள் வகையறா ஆலயங்களில் ஊரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி உலா நேற்று முதல் மூன்று தினங்களுக்கு நடைபெற திட்டமிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமுதாய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில் நேற்று ஊரணி பொங்கல் மாவிளக்கு சுவாமி திருவீதி விழாவிற்கான அழைப்பிதழை முஸ்லிம் ஜமாத்தார்களிடம் வழங்கி திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். மேலும் இரு சமுதாய முக்கிய பிரமுகர்கள் இணைந்து எவ்வித அசம்பாவிதமும் இன்றி இந்த ஆண்டு விழா சுமுகமாக நடைபெற திட்டமிட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் நேற்று மாலை கோவிலில் 100க்கான பெண்கள் திரண்டு பொங்கல் வைத்து வழிப்பட்டனர் இரவு விநாயகர், செல்லியம்மன், ராயப்பர், ராயமுனியப்பன் விதி உலா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த வ.களத்தூர் ஜமாத் நிர்வாகிகள் ரபிக் ஒதின், ஜாபர் அலி, இதயத்துல்லா உள்ளிட்ட பலரையும் இந்து சமய நிர்வாகிகள் ராமசாமி, நாகராஜ், சங்கர் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடபிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,எஸ்.மணி டி.ஆர். ஓ அங்கையர்கன்னி வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், வட்டாட்சியர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காவல்துறை சார்பில் 3 ஏடிஎஸ்.பிக்கள், 5 டிஎஸ்.பிகள் உள்ளிட்ட பல அதிகாரிகளும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: