புதுப்புது பாடப் பிரிவுகளில் சேர அதிக ஆர்வம்: மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங்

Students, Biomedical, Engineering

சென்னை: பிளஸ் 2 ரிசல்ட் வரும் முன்பே புது புது பாட பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆயுதமாகி வருகின்றனர். அதே சமயம் சில கல்லூரிகளில் அதிக நன்கொடை வசூலிப்பதால் கிடைக்கும் பாடப்பிரிவில் சேரும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுவது கல்லூரி படிப்பு தான். எனவே காலத்திற்கேற்ப அறிமுகமாகும் புது புது பட பிரிவுகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சமீப காலமாக உலகெங்கும் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் ஏ.ஐ எனப்படும் அர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ் ரோபோடிக்ஸ் படிப்புகள் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

கொரோனாவுக்கு பிறகு பயோ மெடிக்கல் என்ஜினியரிங் மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சைபர் செக்யூரிட்டி, கணினி அறிவியல், உணவு தொழில் நுட்பம் ஆகிய படிப்புகளும் பெரும்பாலான கல்லூரிகளில் அதிக அளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏகோபித்த ஆதரவால் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் படிப்பு 3 ஆண்டு பி.எஸ்.சி படிப்பாகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.காம், பி.பி.ஏ போன்ற படிப்புகளும் பிளஸ் 2 ரிசல்ட் வரும் முன்பே குறிப்பிட்ட தொகை செலுத்தி சீட்டை முன்பதிவு செய்கின்றனர். எப்போதும் மவுசு குறையாத படிப்பாக சிவில் இன்ஜினீரிங் உள்ளது. ஆர்.கி.டெக்சர் எனப்படும் கட்டிடக்கலை சார்ந்த ஏராளமான வல்லுநர்கள் தேவைபடுவதால் பி.ஆர் படிப்புக்கு உலக அளவில் வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன.

கலை, அறிவியல் படிப்புகளுக்கும் அதிகளவில்வெளி வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் மீதான ஈர்ப்பு இன்னும் உள்ளது. புதிய படிப்புகளை கல்லூரிகள் போட்டி போட்டுகொண்டு அறிமுகபடுத்தி வருவதால் எந்த பாட பிரிவை தேர்வு செய்வது என்பதில் பெற்றோர் நிலை திண்டாட்டமாக உள்ளது. எனினும் அவர்களை நெருக்கடியில் தள்ளாதவாறு மாணவர்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு சில பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே பெரும்வரவேற்பு கிடைக்கும் நிலையில் அதை பயன்படுத்தி தனியார் கல்லூரிகள் பல லட்சரூபாய் வரை நன்கொடைகளை வசூலிக்க தொடங்கி விடுகின்றன.

இதனால் நன்கொடை தர இயலாத மாணவர்கள் விரும்பும் பாட பிரிவுகளில் சேர முடியாமல் கிடைக்கும் துறையில் சேர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிக நன்கொடை வசூலிக்க படுவதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள். மாணவர்களிடம் அதிக வரவேற்பை பெரும் புதிய பாட பிரிவுகளை அரசு கல்லூரிகளில் உடனுக்குடன் அறிமுகபடுத்துவதன் மூலம் இத்தகைய முரண்பாடுகளை கலைந்து உயர் கல்வியில் சமநிலையை உருவாக்கமுடியும்.

The post புதுப்புது பாடப் பிரிவுகளில் சேர அதிக ஆர்வம்: மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பயோ மெடிக்கல் என்ஜினியரிங் appeared first on Dinakaran.

Related Stories: