காமன்வெல்த் விளையாட்டு பதக்க வேட்டையை இன்று இந்தியா தொடங்குமா? பளு தூக்குதலில் மீராபாய் சானு மீது எதிர்பார்ப்பு

பர்மிங்காம்: இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் முதல்நாளில் இந்திய வீரர்கள் பல போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர். 2வது நாளான இன்று இந்தியா பதக்கம் வேட்டையை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. பளுதூக்குதலில் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மீரா பாய் சானு 49 கிலோ எடை பிரிவில் களம் இறங்குகிறார். அவர் தங்கபதக்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா 57 கிலோ எடை பிரிவில் களம் காண்கிறார்.

இன்று பல பதக்க போட்டிகளில் இந்தியா களம் இறங்குகிறது. இதனால் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் 8 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 16 பதக்கங்களை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது, நியூசிலாந்து 3 தங்கம்,3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7, இங்கிலாந்து 2 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 9, கனடா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4, ஸ்கார்ட்லாந்து ஒரு தங்கம்,ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கங்கள் வென்றுள்ளன.

Related Stories: