முதல் டி20 போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணியை 68 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

டிரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டி20 போட்டியில் கேப்டன் ரோகித் ஷர்மா, தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய தொடக்க வீரர்கள் ரோகித் - சூரியகுமார் முதல் விக்கெட்டுக்கு 4.4 ஓவரில் 44 ரன் சேர்த்தனர். சூரியகுமார் 24, ஷ்ரேயாஸ் 0, பன்ட் 14, ஹர்திக் 1 ரன்னில் வெளியேறினர்.

ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் விளையாடிய ரோகித் 64 ரன் (44 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். ஜடேஜா 16 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் கார்த்திக் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்த, இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் குவித்தது. கார்த்திக் 41 ரன் (19 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), அஷ்வின் 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 122  ரன் எடுத்து தோற்றது.

Related Stories: