கோவையில் கந்துவட்டி ஆபரேஷன் 2.0 379 ஆவணங்கள் ரூ.1.26 கோடி சிக்கியது

கோவை: கோவை மாவட்டத்தில் கந்துவட்டி ஆபரேஷன் 2.0 திட்டத்தை துவக்கி கடும் நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்படி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் உள்பட 41 பகுதிகளில் போலீசார் கந்துவட்டி கும்பல் தொடர்பாக அதிரடி சோதனை நடத்தினர். இதில், மதுக்கரை கந்தே கவுண்டன் சாவடி வட்டாரத்தில் நடராஜன் என்பவர் உட்பட சிலரிடம் கந்து வட்டி வசூல் தொடர்பாக ரூ.1.26 கோடியையும், 15 பேரிடம்  379 சொத்து ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: