ஆடி அமாவசையை முன்னிட்டு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளுடன் விவசாயிகள் சிறப்பு வழிபாடு!

திருப்பூர்: ஆடி அமாவசையை முன்னிட்டு திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் 300-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளுடன் விவசாயிகள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலில் அடி அமாவசையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள்  குவிந்தனர். இதற்கிடையில் உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம், கிணத்துக்கடவு, திண்டுக்கல்  மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் சுமார் 300 மேற்பட்ட விவசாயிகள் தங்களது  மாட்டுவண்டிகளில் வருகை புரிந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

முன்னோர்கள் கூறிய அறிவுரையின் படியின் தங்களது கால்நடைகள் நோய் நொடியின்றி ,நீண்ட நாட்கள் நலமுடன்  இருக்க இரட்டை  மாட்டுவண்டிகளுடன் அடி அமாவசையை யன்று  திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் தரிசனம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் எனவும், காங்கேயம் இனம் நாட்டு மாடுகள் வளர்ச்சி பெருகும் என பல ஆண்டுகளாக முன்னோர்கள் கூறிய  அறிவுரையின் பேரில் பல ஆண்டுகளாக வருகிறோம் என்றும் இதனால் கால் நடைகள் நோய் நொடியின்றி நலமாக தொடர்ந்து இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: