எல்லா கிராமத்திலும் 4ஜி சேவை பிஎஸ்என்எல் மறுசீரமைப்புக்கு ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-ஐ மறுசீரமைக்க ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, கூட்டத்திற்குப் பின் ஒன்றிய தொலைதொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ‘‘ரூ.1.64 லட்சம் கோடியில், புதிய மூலதனம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, பாரத் பிராட்பேண்ட் நிகாம் நிறுவனத்தை பிஎஸ்என்எல்.லுடன் இணைப்பதன் மூலம் பைபர் நெட்வொர்க்கை அதிகரித்தல் ஆகிய மறுசீரமைப்பு பணிகள் மூலம் பிஎஸ்என்எல் சேவைகள் மேம்படுத்தப்படும்.

4ஜி சேவை தரத்தை மேம்படுத்த ரூ.44,993 கோடி செலவில் 900/1800 மெகாஹெட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்படும். ரூ.26,316 கோடி செலவில் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். இதன் மூலம், இதுவரை 4ஜி சேவை இல்லாத தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள 24,680 கிராமங்களில் 4ஜி மொபைல் சேவை வழங்கப்படும்,’’ என்றார்.

Related Stories: