டிராவிட்டை டேவிட் ஆக்கிய பத்திரிக்கை செய்தி… பல ஆண்டு ரகசியத்தைப் பகிர்ந்த ராகுல் டிராவிட்

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் 1996-ல் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். டெஸ்டில் 13288 ரன்களும், ஒருநாள் போட்டியில் 10889 ரன்களும் எடுத்தார். குறிப்பாக அவர் டெஸ்ட் போட்டியில் ‘இந்தியாவின் தூண்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இந்நிலையில் ராகுல் திராவிட் தனது பெயர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தன் பள்ளி நாட்களில் கிரிக்கெட் ஆடிய காலத்தில் தான் சதமெடுத்தாலும் தன் பெயர் பிரபலமடையாது இருந்தது தனக்கு ஒரு உத்வேகத்தை ஊட்டி தன் பெயரை அனைவரும் அறிய நிலைநாட்டுமாறு செய்ய வேண்டும் என்ற உணர்வைத் தூண்டியதாக தெரிவித்தார்.

பள்ளியில் படிக்கும் போது ஒரு போட்டியில் ராகுல் திராவிட் சதமெடுத்தார், ஆனால் இதனை குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவர் திராவிட் என்ற பெயரை டேவிட் என்று திருத்தி தன் பெயரை எழுதியதை திராவிட் நினைவு கூர்ந்தார். “அந்தப் பத்திரிக்கை எடிட்டர் என் பெயரில் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது என்று திராவிட் ஆகிய என்னை டேவிட் என்று திருத்தி விட்டார். திராவிட் என்று யாரும் இருக்க முடியாது என்பது அவரது துணிபு, எனவே நான் திராவிட் அல்ல டேவிட் புரிகிறதா? என ருசிகராமாக பேசினார்.

Related Stories: