ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன்-ஜில்லா பரிஷத் தலைவர் பேச்சு

சித்தூர் :ஆந்திர மாநிலத்தில் மின் ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ஜெகன்மோகன் தான் என்று ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

சித்தூர் அம்பேத்கர் பவனில் ஆஜாத்அம்ருத் மகோத்சவம் திட்டத்தின்கீழ் சித்தூர் ஜில்லா பரிஷத் தலைவர் வாசு தலைமையில் மின்துறை ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அவர் பேசியதாவது:

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒவ்வொரு துறையை சேர்ந்த ஊழியர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, இன்று(நேற்று) மாவட்ட மின்சாரத்துறை ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மின்சாரத்துறை ஊழியர்கள் இரவு, பகலும் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். மழைக்காலங்களில் மின்சாரம் தடை ஏற்பட்டால் சம்பவ இடத்திற்கு சென்று மின்சாரத்தை சரி செய்து வருகின்றனர்.  

மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டி மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை வழங்கினார். முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆட்சியில் விவசாயிகளுக்கு சரியாக மின்சாரத்தை வழங்காமல் ஆட்சிபுரிந்தார். இதனால், ஏராளமான விவசாயிகள் மின்சாரமின்றி அவதிப்பட்டனர். முதல்வர் ஜெகன்மோகன் விவசாயிகளுக்கு நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிட்டார். எஸ்சி, எஸ்டி வகுப்பை சேர்ந்த மக்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறார். மின் தட்டுப்பாடு இருந்தாலும் வெளி மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரத்தை வாங்கி மக்களுக்கு மின்சாரத்தை வழங்கி வருகிறார்.

மின்சார துறையில் பல கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. இருப்பினும், முதல்வர் ஜெகன்மோகன் மின்சாரத்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கி தடையின்றி மின்சாரத்தை வழங்கி வருகிறார். நகரங்களில் 24 மணிநேரம், கிராமங்களில் 20 மணிநேரம் மின்சாரம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விவசாய நிலத்தில் உள்ள கிணறுகளுக்கு மின்மீட்டர் பொருத்த உத்தரவு பிறப்பித்தார். மேலும், விவசாயிகள் மின்சாரத்தை எவ்வளவு பயன்படுத்தினார்களோ? அந்த மின்சார கட்டன தொகையை மாநில அரசு விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்திவிடும் என தெரிவித்தார். இதற்கு விவசாயிகள் சம்மதித்தாலும் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு விவசாயிகள் இடையே பிரச்சனைகளை ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுபட செய்து வருகிறார்.

அவரது ஆட்சியில் விவசாயிகளுக்கு மின்சாரம், கடன் தள்ளுபடி, தரமான விதை தானியங்கள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்டவை வழங்கவில்லை. முதல்வர் ெஜகன்மோகன் ஆட்சியில் விவசாயிளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. தரமான பூச்சிக்கொல்லி மருந்து, உரங்கள், விதை தானியங்கள் வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு இலவச பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. மின்சாரத்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கியுள்ளார்.

மின்சார துறை ஊழியர்களின் நலனுக்காக பாடுபட்ட ஒரே முதல்வர் ெஜகன்மோகன். நகரம் மற்றும் கிராமங்களில் மின்சாரம் தடைப்பட்டால் உடனே சரி செய்து இடையூறின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின்சாரத்துறை ஊழியர்கள் மின்சாரத்தை மிச்சப்படுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் முருகன் ஹரிநாராயணன், எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு, மேயர் அமுதா, ஜில்லா பரிஷத் முதன்மை செயல் அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: