சென்னை விமான நிலையத்தில் ரூ.8.86 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்: சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: விமான நிலையத்தில் ஹெராயின் போதைப் பொருள் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை விமான நிலையத்தில் 1.256 கிலோ எடையுள்ள ஹெராயினை பறிமுதல் செய்திருக்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து தங்கம், போதைப்பொருள்கள் கடத்துவது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை ஈடுபடுவது வழக்கமாகும். அவ்வாறு ஈடுபட்ட பொழுது உகாண்டாவில் இருந்து  விமானத்தில் வந்த  ஒரு பயணி சந்தேகத்திற்கு இடமாக பிடிப்பட்டார். அவரை அழைத்து விசாரித்த போது அவர் பெயர் ஜோசப் பேட்ரிக் எனவும் சுற்றுலா விசாவில் வந்ததும் தெரியவந்தது.

அதன் பிறகு பயணி மீது சந்தேகம் அடைந்த நிலையில் அவரது வயிற்றுப்பகுதியை சோதனை செய்து பார்த்த போது போதை மாத்திரைகளை விழுங்கியிருப்பதாக தெரிய வந்தது. இதனிடையே அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு எனிமா கொடுக்கப்பட்டது. அவருக்கு கொடுக்கப்பட்ட எனிமா மூலம் சுமார் 86 மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அதன் எடையானது 1.256 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சர்வதேச மதிப்பாக ரூ.8.86 கோடி மதிப்புள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போதைப்பொருள் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories: