காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் உள்ளன. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 40 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவராக கருப்படை தட்டடை ஊராட்சி மன்ற தலைவரான பொன்னா (எ) என்கின்ற வெங்கடேசன் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

செயலாளராக பாரத் துணை தலைவராக சகுந்தலா சங்கர், சண்முகம், துணை செயலாளராக தெய்வானை சுரேஷ்பாபு, சுகுணா தேவேந்திரன், சுமதி குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக திலகவதி குமரேசன், ஏழுமலை, வேண்டா சுந்தரமூர்த்தி, இந்திரா ஜோசப், குணபூசனம் நளினி உள்ளிட்ட பலர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், ஊராட்சி அடிப்படை மற்றும் பொதுவான பணிகளை சிறப்பாக செய்வது, ஏதாவது குறை இருப்பின் அதை கேட்டு பெற்று செய்து முடிப்பது, எந்த பிரச்னையாக இருந்தாலும் பேசி முடிவு செய்து ஊராட்சி மக்களுக்கு சிறப்பான வசதியை ஏற்படுத்தி கொடுப்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: