பாகிஸ்தான் முட்டுக்கட்டையை முறியடித்தது இந்தியா; அதிகரிக்கும் ஐபிஎல் போட்டிகள்.! ஐசிசி கூட்டத்தில் முடிவு

பர்மிங்காம்: அடுத்த 5 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் அட்டவணையை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக இங்கிலாந்தில் ஐசிசி உறுப்பினர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் இந்தியா தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டது. அதற்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட, தற்போது இந்தியா அதனை வெற்றிக்கரமாக தகர்த்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளை இனி வரும் காலங்களில் பெரிதாக நடத்தி, அதன் மூலம் லாபம் மேற்கொள்ள காய் நகர்த்தியது.

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மூலம் பிசிசிஐ ரூ.40 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளியது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை உயர உள்ளது. எத்தனை போட்டிகள் 2023ம் ஆண்டு மற்றும் 2024ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எண்ணிக்கை 74 ஆகவும், 2025 மற்றும் 2026ம் ஆண்டு 84 போட்டிகளும், 2027ம் ஆண்டு 94 போட்டிகளாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அளவுக்கு போட்டிகளை நடத்த, அதற்கு ஏற்ப நேரம் வேண்டும். மற்ற நாட்டு வீரர்களும் முழுமையாக தொடரில் விளையாட வேண்டும். இதற்காக, ஐபிஎல் போட்டிகள் நடத்த இரண்டரை மாதங்கள் பிரத்யேக காலம் வேண்டும் என்றும், அந்த நேரத்தில் மற்ற சர்வதேச போட்டிகள் நடத்த கூடாது என்றும் பிசிசிஐ கோரிக்கை வைத்தது.

அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து, ஜூன் மாதம் முதல் 10 நாள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தவில்லை என்று ஐசிசி ஒப்புகொண்டது. இதே போன்று டிசம்பர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவும், பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானும், ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தும், செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அவர்கள் நாடு நடத்தும் டி20 தொடருக்காக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதற்கு தகுந்தார் போல் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது.

Related Stories: