ஓட்டலில் பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போல தொழிலதிபரை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்: 3 பேர் கும்பலை தேடும் போலீஸ்

கோவை: கோவையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவை அரசு கல்லூரி ரோட்டை சேர்ந்த 63 வயது தொழிலதிபர் ஒருவர் தங்கியிருந்தார். அவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்ள சென்றதாகவும், அவருடன் பெண் ஒருவர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது கையில் கத்தியுடன் அறையில் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், ‘‘நீ எப்படி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ளலாம்?’’ என கேட்டு தொழிலதிபரை தாக்கியுள்ளனர். பின்னர் கத்திமுனையில் அவரை மிரட்டி தொழிலதிபர் மற்றும் அங்கிருந்த பெண்ணுடன் செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த ரூ.1000 மற்றும் ஏடிஎம் கார்டை பறித்தனர். இதைத்தொடர்ந்து தொழிலதிபரிடம், ‘‘உனது நிர்வாண வீடியோவை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சமூக வலைதளத்தில் வெளியிடுவோம்’’ என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர், அங்கிருந்து தப்பித்து அருகில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, அந்த 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: