கட்சி விதிப்படி தேர்வான அதிமுக தலைவருடன் பாஜ கூட்டணி: அண்ணாமலை பேட்டி

சென்னை: அதிமுக உள்கட்சி விதிகளுக்குட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருடன் பாஜ கூட்டணியில் இருக்கும் என்று தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார். சிவசேனா உள்ளிட்ட எங்களுடன் கூட்டணி இல்லாத 7 கட்சிகள் அவருக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளன. பாஜவை பொறுத்தவரை அதிமுக  செயற்குழு முறைப்படி உள்கட்சி விதிகளுக்கு உட்பட்டு தேர்ந்து எடுக்கப்பட்ட தலைவருடன் கூட்டணியில் இருக்கும். எங்களுக்கு எந்த தலைவர் மீதும் விருப்பு வெறுப்பு கிடையாது. கட்சியோடு தான் கூட்டணி வைத்து இருக்கிறோம். அதிமுக உள்கட்சி பிரச்னையில் அவர்களே அமர்ந்து முடிவு செய்து அவர்களின் தலைவரை தேர்வு செய்து தமிழக மக்களுக்கு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: