பால்வெளி கிரகத்தில் தண்ணீருக்கான அறிகுறி: ஜேம்ஸ் வெப் அடுத்த கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: `பால்வெளி மண்டலத்தில் சுற்றி வரும் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது,’ என நாசா தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து 10 லட்சம் மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இதன் மூலம், 1300 ஒளி ஆண்டுகளுக்கு முந்தைய பிரபஞ்சத்தின் தோற்றத்தை அறிய முடிந்தது. இந்த புகைப்படம் உலகளவில் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில், பால்வெளி மண்டலத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகிரகங்கள் சுற்றி வருகின்றன. இவை, 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அங்குள்ள சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் இந்த கிரகங்களில், வாஸ்ப்-96 பி என்ற கிரகமும் ஒன்று. இதில், தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டறிந்துள்ளது என நாசா நேற்று தெரிவித்தது.

வியாழனை விட பாதிக்கும் குறைவாகவும், விட்டத்தில் 1.2 மடங்கு பெரியதாகவும் உள்ள வாஸ்ப்-96 பி கிரகம், சூரியனைச் சுற்றி வரும் மற்ற கோள்களை விட மிகவும் பிரகாசத்துடன் ஒளிர்கிறது. இது, 538 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலையுடன் உள்ளது என்று நாசா கூறியுள்ளது.

இதற்கு முன்பு, நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கி, கடந்த 20 ஆண்டுகளாக பால்வெளி மண்டலத்தில் காணப்படும் பல சிறு கிரகங்களை ஆராய்ந்து, 2013ம் ஆண்டில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் குறுகிய கால கண்டுபிடிப்புகள், பூமிக்கு அப்பால் மனிதன் வாழக் கூடிய கிரகங்களை கண்டறியும் விஞ்ஞானிகளின் தேடலில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று கருதப்படுகிறது.

Related Stories: