ஊத்துக்கோட்டையில் சேதமடைந்த கால்நடை மருத்துவமனை; புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் தேசமடைந்த கால்நடை மருத்துவமனையை இடித்துவிட்டு புதிய கட்டிடம் வேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கைவிடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை  பேரூராட்சி 12 - வது பகுதியில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது .இந்த மருத்துவ மனைக்கு ஊத்துக்கோட்டை , அனந்தேரி, போந்தவாக்கம், மேலக்கரமனூர், தாராட்சி  உள்ளிட்ட 20  க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆடு,மாடு, கோழி, நாய், பூனை போன்ற வீட்டில் வளர்க்கும்  கால்நடைகளை சிகிச்சைக்காக மக்கள் கொண்டு வருவார்கள் ஒரு நாளைக்கு 25 முதல் 30 பேர் வரை சிகிச்சைக்கு வந்து செல்வார்கள் .

இந்நிலையில் இந்த கால்நடை மருத்துவமனை கட்டி பல வருடங்கள் ஆகிறது என்பதால் தற்போது அந்த கட்டிடம்  பழுதடைந்து உள்ளது. மேலும் புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அப்பகுதி மக்கள் கூறும்போது,  ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கால்நடை மருத்துவமனை உள்ளது இந்த மருத்துவமனைக்கு பல வருடங்களாக டாக்டர்கள்  இல்லாமல் இருந்தனர்.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.  மேலும் கால்நடை மருத்துவமனை கட்டி பல வருடங்கள் ஆவதால் தற்போது அந்த மருத்துவமனை சேதமடைந்துள்ளது. எனவே புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: