அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே உள்ள கோட்டைவேங்கைப்பட்டி அய்யனார் கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு விழா நடந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே  கோட்டைவேங்கைப்பட்டி கண்ணமங்கலம் கண்மாய் கரையோரத்தில் கரமால் கொண்ட அய்யனார் கோயில் உள்ளது. பிராண்டிபட்டி, சூரம்பட்டி கிராமமக்கள் சார்பில் இந்த கோயிலில் ஆனி மாத புரவி எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, சிங்கம்புணரி வேளார் தெரு புரவி பொட்டல் திடலில் புரவி செய்யும் பணி தொடங்கியது. 1 அரண்மனை புரவி ஒன்று, 2 கிராம புரவி, 1 நேத்திக்கடன் புரவி என 4 புரவிகள் செய்யப்பட்டன.

இதனைத்தொடர்ந்து நேற்று மாலை கோட்டைவேங்கைபட்டி, பிரண்டிப்பட்டி, சூரம்பட்டி கிராமத்தார்கள் சாமியாட்டத்துடன் புரவிகளுக்கு தீபாராதனை காட்டி வழிபட்டனர். பின்னர் புரவிகளை சுமந்து கொண்டு, சிங்கம்புணரி சந்தி வீரன் கூடம் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து, கோட்டைவேங்கைபட்டியின் மைய பகுதியில் இறக்கி வைக்கப்பட்டன. பின்னர் மாவிளக்கு வைத்து பூஜைகள் செய்து அய்யனாரை பெண்கள் வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோட்டைவேங்கைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: