மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் பகுதிகளுக்கு ஜூலை 9ம் ரெட் அலர்ட் எச்சரிக்கை

மும்பை: மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு எடுத்து ஓடுகிறது. இடைவிடாத மழை காரணமாக ரயில், பேருந்துப் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 107 மி.மீ மழை பெய்துள்ளது. கிழக்கு மற்று மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை பெய்துள்ளது. சில ஆறுகளில் தண்ணீ்ர அளவு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருவதால் ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சிந்துதுர்க் போன்ற பகுதிகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி, பால்கர், புனே மற்றும் சதாரா ஆகிய பகுதிகளுக்கு ஜூலை 8 வரை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தானே மற்றும் மும்பைக்கு ஜூலை 10 வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுவிடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: