குன்னூர் டால்பின் நோஸ் பகுதியில் கடும் பனிமூட்டம்: செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்

குன்னூர்: குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனையில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதை, சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து ரசித்து செல்கின்றனர்.

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. குன்னூர், அருவங்காடு, உபதலை, ஓட்டுப்பட்டரை, காட்டேரி, சேலாஸ் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறு மற்றும் ஓடைகளில் ‌நீர் வரத்து அதிகரித்து.

குன்னூர் நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் கடும் பனி மூட்டம் காணப்பட்டதால் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணித்தனர். கடும் குளிர் நிலவியதால் பொது மக்கள் மற்றும் அலுவலக பணிக்கு செல்வோர் கடுமையாக பாதிப்புக்குளாகினர்.

குன்னூர் டால்பின் நோஸ் காட்சி முனை பகுதியில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி பயணித்தனர். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது. இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து கால நிலையை ரசித்து சென்றனர்.

Related Stories: