தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குவிந்த கல்வியியல் பட்டதாரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் 256, பட்டதாரி ஆசிரியர் 416, தொடக்கப்பள்ளி ஆசிரியர் 133 என காலிப்பணியிடங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.7500 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், பொன்னேரி, திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தோர் ஆன்லைன் மூலமாகவும் நேரிலும் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விண்ணப்பம் அளிப்பதற்காக குவிந்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், அங்கு விண்ணப்பம் அளிக்க வந்த கல்வியியல் பட்டதாரிகளிடம் காலிப்பணியிட விவரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க வந்தவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், நேர்முக உதவியாளர்கள் பூபால முருகன், தேவி ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

Related Stories: