கந்தர்வகோட்டை பகுதியில் கத்தரிக்காய் விலை சரிவு

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வடுகப்பட்டி, வாண்டையான்பட்டி, மங்கனூர், காட்டு நாவல், சுந்தம்பட்டி, கந்தர்வகோட்டை, சோலகம்பட்டி போன்ற கிராமங்களில் கத்தரி செடிகள் விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். கத்தரிசெடியை பொருத்தவரை செடி வைத்ததில் இருந்து 45 தினங்களில் காய் காய்க்க தொடங்கிவிடும். முறையாக பராமரித்து வந்தால் ஆறு மாத காலங்கள் தொடர்ந்து காய் காய்ந்துவரும்.

தற்சமயம் காற்று வீசுவதால் கத்தரி செடிகள் பூக்கள் நன்கு பூத்து காய்கள் நிறைய காய்ந்து வருகின்றது. நிறைய காய் காய்க்கும் நிலை இருந்தாலும் விலை சரிவடைந்துள்ளது. இதைப்பற்றி விவசாயிகள் பேசும் போது, காய்கள் அதிகமாக இருப்பதால் விலை சரிவு பற்றி தற்சமயம் கவலை கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்தனர்.

Related Stories: