டொமினிகா: வங்கதேச அணியுடனான 2வது டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் 35 ரன் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் டி20 தொடரில் (3 போட்டி) விளையாடி வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், 2வது போட்டி இந்திய நேரப்படி நேற்று அதிகாலை முடிந்தது. டாஸ் வென்று பேட் செய்த வெ.இண்டீஸ் 20 ஓவரில் 5விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. அதிகபட்சமாக ரோவ்மன் பாவெல் 61* ரன் (28 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்), பிராண்டன் கிங் 57 ரன் (43 பந்து,7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.