விம்பிள்டன் டென்னிஸ் தொடர் 13-வது முறையாக கால் இறுதிக்குள் நுழைந்த; ஜோகோவிச் மகளிர் ஒற்றையரில் ஓன்ஸ் ஜபீர் அசத்தல்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் 35வயது நோவக் ஜோகோவிச், 25 வயதான நெதர்லாந்தின் டிம்வான் ரிஜ்தோவனுடன் மோதினார். இதில் 6-2, 4-6, 6-1, 6-2  என்ற செட் கணக்கில்  ஜோகோவிச் வெற்றி பெற்று கால்  இறுதிக்குள் நுழைந்தார்.  

விம்பிள்டனில் ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக நேற்று 83வது வெற்றியை பெற்றார். புல்தரையில் தொடர்ச்சியாக இதுஅவருக்கு 25வது வெற்றி. மேலும் 13வது முறையாக விம்பிள்டன் தொடரில் கால்இறுதிக்குள் நுழைந்துள்ளார். தொடர்ச்சியாக இது 5வது முறையாகும். கால் இறுதியில் அவர் 10ம் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக்சின்னரை நாளை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையரில் 4வது சுற்றில் 3ம் நிலை வீராங்கனை துனிசியாவின் ஓன்ஸ் ஜபீர் (27),பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்சுடன் மோதினார்.

இதில் 7-4,6-4 என்ற செட்கணக்கில் ஜபீர் வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். ஜெர்மனியின் ஜூல் நிமியர் 6-2, 6-4 என இங்கிலாந்தின் ஹீதர் வாட்சனை வீழ்த்தினார்.

Related Stories: