காலநிலை மாற்றத்தால் கோத்தகிரியில் கடும் குளிர்-பொதுமக்கள் அவதி

கோத்தகிரி :  கோத்தகிரியில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காலை முதலே மழை பெய்ததால் கடும் குளிர் நிலவியது.கோத்தகிரி அதன்‌ சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நாள்முழுவதும் சாரல் மழை பெய்து வந்த நிலையில் தற்போது‌ தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், பகல் நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. மதியம் 12 மணி முதல் மழை பெய்ய ஆரம்பித்த நிலையில் கடும் குளிர் நிலவி பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தற்போது மழை பெய்து வரும் கால சூழ்நிலையில் தேயிலை தோட்டங்களில் நன்கு தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. பகல் நேரங்களில் மேகமூட்டத்துடன் மழை பெய்த நிலையில் சாலைகளில் மேகம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகனங்கள் இயக்குவதில் சிரமப்பட்டு பகல் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரிய விட்டவாறு சென்றனர். வாரவிடுமுறை நாள் என்பதால் சமவெளிப் பகுதியில் இருந்து அதிக அளவு சுற்றுலா வாகனங்கள் வந்த நிலையில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க பெரும் சிரமமடைந்தனர்.

Related Stories: