கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

திருப்புவனம்: கீழடி அகழாய்வில் பழங்கால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் எட்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக தோண்டப்பட்ட குழியில் இரு வண்ணங்களில் சுடுமண் கிண்ணம் கிடைத்தது. நேற்று அதே குழியை ஆழப்படுத்தியபோது சுடுமண் செங்கல்களால் கட்டப்பட்ட செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. 4 அடி நீளமுள்ள இந்தக் கட்டுமானத்தில் மூன்றடுக்கு வரிசையில் செங்கல் கட்டப்பட்டுள்ளது. அதனருகே 2 சுடுமண் பானைகள் சிதைந்த நிலையில் உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செங்கல் கட்டுமானத்தில் உள்ள செங்கல்கள் சிதையாமல் ஒழுங்கான வடிவத்தில் உள்ளது. மேலும், ஆய்வு செய்தால் கட்டுமானத்தின் நீளம், உயரத்தை கண்டறியலாம் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: