தேரோட்டத்திற்கு தயாராகும் தேர்

ராஜபாளையம்: ஆனி மாத தேரோட்டத்திற்காக ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோயில் தேர் தயாராகி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பெத்தவநல்லூர் அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ஆனி தேரோட்டம் ஜூலை 11ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதையொட்டி தேர் சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆகம விதிப்படி பஞ்சகாவியம் கலந்த தூய நன்னிரால் ஏர்கன் மூலம் தேர் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேர் சக்கரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணி மன்றம் மேற்கொண்டு வருகிறது.

Related Stories: