இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு

பர்மிங்காம்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதனிடையே கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா- லீசெஸ்டர்ஷைர் அணிகள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து லெவன்:அலெக்ஸ் லீஸ், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், சாம் பில்லிங்ஸ் , மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இரு அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், போட்டியில் வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிதும் எழுந்துள்ளது.

Related Stories: