ஆதம்பாக்கத்தில் வீட்டின் கதவை உடைத்து, 15 பவுன் நகை கொள்ளை; மர்ம நபர்கள் கைவரிசை

ஆலந்தூர்: ஆதம்பாக்கத்தில் நேற்றிரவு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சென்னை ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர், 26வது தெரு சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (40). மீஞ்சூரில் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

 நேற்றிரவு 9 மணியளவில் சண்முகசுந்தரம் வீட்டை பூட்டிவிட்டு, அதே பகுதியில் நடைபயிற்சிக்கு சென்று விட்டார். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகைள மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

புகாரின்பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: