ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: பாஜ அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜ அரசின் பழி வாங்கும் அரசியலை கண்டித்தும், அக்னி பாத் திட்டத்தை கைவிடக்கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று  திருக்கழுக்குன்றத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.  

இதில், திருக்கழுக்குன்றம் நகர தலைவர் மணிகண்டன், முன்னாள் நகர தலைவர் கமலஹாசன்,    மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்ட பொது செயலாளர் சேகர், முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணசாமி, நகர துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: