கூட்டுறவு துறை மூலம் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு ரூ.150 கோடி மானியம்

சேலம்: கூட்டுறவு துறை மூலம் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு ரூ.150 கோடி மானியத்தை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் பங்க் போன்றவற்றை நடத்துகின்றன. ரேஷன் கடைகளுக்கான வாடகை, ஊழியர்கள் சம்பளம், மின் கட்டணம், பொருட்களை அனுப்புவதற்கான போக்குவரத்து உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள, கூட்டுறவு சங்கங்களுக்கு அரசின் சார்பில் ஆண்டு தோறும் மானியம் வழங்கப்படுகிறது.

ரேஷன் கடை செலவினங்களுக்கான மானியமாக, 2021-2022ம் ஆண்டு ரூ.300 கோடி வழங்குமாறு கூட்டுறவு துறை சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுவிக்கப்பட்டது. அதில், தற்போது ரூ.150 கோடியை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிதி மாவட்ட வாரியாக உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: