ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே வைகாசி விசாக விழாவை முன்னிட்டு, பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை கிராமத்திலுள்ள ரணபத்ரகாளியம்மன் கோயிலில் 42-ம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று பாய்மர படகு போட்டி நடைபெற்றது.

படகு ஒன்றில் 5 நபர்களும், 25 கிலோ எடையுள்ள 2 மணல் மூட்டைகள் மற்றும் பாய்மரம் உள்ளிட்டவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி போட்டி நடந்தது. போட்டியில் 15 படகுகள் கலந்து கொண்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 30,001, இரண்டாம் பரிசு ரூ. 25,001 மூன்றாம் பரிசு ரூ. 20,001, நான்காவது பரிசு ரூ. 15,001 வழங்கப்பட்டது. மேலும் முதலாவதாக வந்த படகிற்கு சிறப்பு பரிசாக ரூ. 5,001 வழங்கப்பட்டது. போட்டியை காண்பதற்காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: