கரூர் காதப்பாறை கிராமத்தில் ரோட்டில் கழிவுநீர் செல்வதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் காதப்பாறை கிராமத்தில் ரோட்டில் கழிவுநீர் செல்வதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியம் காதப்பாறை கிராமம் கொங்கு கல்லூரி அருகில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. தினசரி இந்த கல்லூரிக்கு சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது.

அது மட்டுமின்றி அருகிலுள்ள சமுதாய திருமண மண்டபம் இப்பகுதியில் அமைந்திருப்பதால் திருமண விழா மற்றும் அரசியல் கட்சிகள் இந்த அரங்கிலே அதிகமாக விழாக்கள் நடத்தும் பகுதியாகும். இந்த சாலை வழியாக தினசரி பெரிச்சிபாளையம் மற்றும் மாங்காய் சோளிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை ஆகும்.

இப்பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் மற்றும் குளிக்கும் நீர்களை முறையாக வடிகால் வசதி கட்டி வெளியே அனுப்பாமல் நேரடியாக பொதுமக்கள் நடந்து செல்லும் சாலைகளில் திறந்து விடுவதால் பொதுமக்களுக்கு சுகாதாரதிற்கு அச்சுறுத்தும் வண்ணம் உள்ளது.

எனவே ஒன்றிய அதிகாரிகள் நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கழிவுகள் ரோட்டில் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: