வீரகனூர் ஏரியில் பனைமரத்தை பிடுங்கி போட்டு சவுடு மண் அள்ளும் கும்பல்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம், தலைவாசல் தாலுகா வீரகனூர் ஏரியில் சவுடு மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி வரன்முறை இல்லாமல் இயற்கை வளங்கள் அதிக அளவில் கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

10 நடை மணல் எடுக்க அனுமதி பெற்றுக்கொண்டு, 50 நடைகளுக்கு மேல் வரன்முறை இன்றி ஏரி மண் அள்ளி கடத்தப்படுகிறது. அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். ஏரியில்  உள்ள பனை மரங்களை சுற்றிலும் மிகவும் நல்ல சவுடு மண் கிடைக்கும் என்பதால், பனை மரங்களை வேரோடு பிடுங்கி போட்டுவிட்டு மணல் அள்ளிச் செல்லும் அவலமும் நடக்கிறது.

10 அடி அளவிற்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் அள்ளுவதால் மழை காலங்களில் அதில் தண்ணீர் தேங்கும் போது, குழந்தைகள் மற்றும் நீச்சல் தெரியாதவர் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.  இதேபோல் வீரகனூர் அருகே கிழக்கு ராஜபாளையத்தில் மணல் கொள்ளையர்கள் கிராவல் மண்ணை போட்டி போட்டுக்கொண்டு அள்ளி வருவதாக மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: