சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்

 

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.12,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.640 உயர்ந்திருந்த நிலையில் பிற்பகல் ரூ.720 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்துள்ளதால் நகை வாங்குவோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மாதம் தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.95,000 ஆக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து கடந்த திங்கட்கிழமை ரூ.99,000-ஐ தாண்டியது. அதன்பிறகு அடுத்தடுத்த தேதிகளில் ரூ.1,00,000 ஆகவும், அடுத்த நாள் ரூ.1,00,040 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது. இந்த தொடர் விலை உயர்வால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்தனர்.

நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், பவுனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு பவுன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.640 அதிகரித்து ஒரு பவுன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. இதன் மூலம் வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

Related Stories: