புழல் பகுதியில் இடியுடன் மழை: மழைநீரில் குடிநீர் பிடிக்கும் அவலம்

புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை, தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை புழல் காவாங்கரை கண்ணப்பசாமி நகர், கன்னடபாளையம், காந்தி நகர், திருவிக. நகர், அண்ணா நினைவு நகர், புனித அந்தோணியார் நகர், திருவீதி அம்மன் கோயில் தெரு, உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

என்எஸ்கே. தெருவில் மழைநீரில் நின்றபடி பொதுக்குழாயில் மக்கள் தண்ணீர் பிடிக்கின்றனர். இதன்மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சென்னை மாநகராட்சி 23, 24 வது வார்டு அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். தெருக்களில் எதிர்காலத்தில் தண்ணீர் தேங்காமல் இருக்க மழைநீர் கால்வாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: