கோகுல இந்திரா எடப்பாடிக்கு ஆதரவு

சென்னை: சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா நேற்று மதியம் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவரை பின்தொடர முடிவு செய்துள்ளேன். அதிமுக பொதுக்குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம். அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டு காலம் எடப்பாடி நல்லாட்சி நடத்தி உள்ளார். அடிமட்ட அதிமுக தொண்டன் வரை சந்தோஷமாக உள்ளனர். ஓபிஎஸ் மீது தனிப்பட்ட மரியாதை வைத்துள்ளேன். அதேநேரம், கட்சி மற்றும் தொண்டர்கள் நலன் கருதி அதிகளவில் நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்க முடிவு செய்துள்ளனர். அந்த வகையில் நானும் எடப்பாடியை சந்தித்து எனது ஆதரவை தெரிவித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: