வடசென்னை காவல்துறை சார்பில் பிரமாண்ட போதை விழிப்புணர்வு ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்

தண்டையார்பேட்டை: வடசென்னை காவல்துறை சார்பில், நேற்று மாலை பிரமாண்ட போதை விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து மாணவ, மாணவிகள் அசத்தினர். சென்னை தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ஒரு தனியார் மண்டபத்தில் வடசென்னை காவல்துறை மற்றும் பாய்ஸ் கிளப் இணைந்து, நேற்று மாலை போதை விழிப்புணர்வு குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது. வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யபாரதி ஆலோசனையின்பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் இருதயம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தண்டையார்பேட்டை சங்கரநாராயணன், மகளிர் காவல் நிலைய பிரியதர்ஷினி, வண்ணாரப்பேட்டை தவமணி ஆகியோர் முன்னிலையில் ஓவியப் போட்டி நடைபெற்றது.

135 மாணவ, மாணவிகள் பங்கேற்று, பிரமாண்ட போதை விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்து அசத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேரடியாக பரிசுகள் வழங்கி பாராட்டுகிறார் என போலீசார் தெரிவித்தனர். இதில் எஸ்ஐக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: